இந்திய – மியான்மர் எல்லை அருகே மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுத குழுவை சேர்ந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
நியூ சாம்தால் கிராமம் அருகே ஆயுத குழுவினர் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆயுத மேந்தியவர்கள் வீரர்களை நோக்கி சுட்டனர்.
இதை அடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.