விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அருந்ததியர் குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமி படுகாயமடைந்தார்.
சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி – பாக்கியலட்சுமி தம்பதி அங்குள்ள அருந்ததியர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இத்தம்பதியின் மகளான கிருத்திகாதேவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருந்ததியர் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததே விபத்துக்கு காரணம் என குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.