திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவுத்தம் பாளையம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் துணை மின் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் துணை மின் நிலையம் அமைத்தால் அப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு பாதிப்படையும் என கூறி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.