நடிகை பாவனா நடித்துள்ள தி டோர் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது தி டோர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வரும் 16-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.