பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாகவும், தக்க பதிலடி வழங்கியதாகவும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள திருவிளக்கு திருவிழா மற்றும் பெண்களுக்கு விருது வழங்கும் விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அவிநாசி வாசிஸர் மடாலயம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிரவை ஆதீனம், நாட்டில் அமைதி நிலவ திருவிளக்கு பூஜை நடைபெறுவதாகத் தெரிவித்தார். .