மாருதி நிறுவனம் விரைவில் e விட்டாரா எலெக்ட்ரிக் காரை வெளியிடவுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதமே இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளைக் கொடுக்கவிருக்கிறது.