சாம்சங்கின் மிக மெல்லிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 எலைட், 200MP கேமரா யூனிட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் 12ஜிபி + 256ஜிபி மெமரி மாடலின் விலை 1 லட்சத்து 9 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 12ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை 1 லட்சத்து 21 ஆயிரத்து 999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.