ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர். மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தைச் சிறப்பாக நிலைநிறுத்தத் தேவையான மாற்றங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரட்டிப்பாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது.