கோவை அரசு மருத்துவமனையில் இரு கால் சிதைவு நோய்க்கு ஆளான சிறுவனுக்குச் செயற்கை கால்கள் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
கோவை மாவட்டம் கிணற்றுக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் மூன்று வயது மகன் ரிஸ்வந்த்துக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு பிரிவில் அனுமதித்தனர்.
அவனது வலது கால் முட்டிக்குக் கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு செயற்கை உடல் பாகங்கள் தயாரிக்கும் நிலையத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுவனுக்குச் செயற்கை கால் நேர்த்தியான முறைப்படி அளவெடுத்துச் செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டது.