ஈரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் வஉ சிதம்பரனாரின் பேரன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
ஈரோடு செங்கோடபள்ளம் பகுதியில் வ.உ. சிதம்பரனாரின் மகள் உறவு முறையிலான பேரன் மணிக்கிருஷ்ணன் வசித்து வந்தார். 55 வயதான இவர் ஈரோடு வ உ சி பூங்கா அருகே வள்ளலார் புத்தக நிலையம் மற்றும் விதை வெளியீடு நடத்தி வந்தார்.
பல்வேறு தலைப்புகளில் குறும்படங்கள் இயக்கியுள்ள இவர் திரைப்படங்கள் சிலவற்றில் இணை இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். இந்நிலையில் சென்னை வடபழனியில் திரைப்படம் தொடர்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மணிக்கிருஷ்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.