கோவை மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களுக்கும் அதிமுக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தரம் பிரிப்பது குறித்து விவாதிக்கும் பொழுது அவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களுக்கும் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.