ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 700 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு ஆகிய வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து 700 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.