இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடித்துச் சிதறியது.
மேற்கு சுமத்ரா மாகாணத்தின் அகம் மாவட்டத்தில் உள்ள மராபி எரிமலை 9 ஆயிரத்து 480 அடி உயரம் கொண்டது. கடந்த வருடம் பருவமழை பாதிப்பால் மராபி மலைப் பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், மராபி எரிமலை வெடித்துப் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் புகை சூழ்ந்தது. இதனால் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.