கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கினை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில் அந்த பள்ளி சூறையாடப்பட்டது. இது குறித்துச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு தொடர்பாக 615 பேரை நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.