அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்துடன், 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கத்தார் ஏர்வேஸ் கையொப்பமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் 160 ஜெட் விமானங்கள் வாங்கப்படவுள்ளன. தோஹாவில் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் டிரம்ப் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது போயிங் வரலாற்றில் ஜெட் விமானங்களின் மிகப்பெரிய ஆர்டர் இது என டிரம்ப் தெரிவித்தார்.