அல்ஜீரியாவைத் தாக்கிய புழுதி புயலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பத்தின் அளவு புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதோடு புழுதி காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், அல்ஜீரியாவின் ஓவர்க்லாவில் புழுதி புயல் வீசியது. இதனால், தூசி, மண் சூழ்ந்ததால் ஏராளமானோர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.