பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றார். 2019ஆம் ஆண்டு சிபிஐ அளித்த புகாரின் பேரில் லண்டன் போலீசார் நீரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீரவ் மோடியை நாடு கடத்த இந்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து சட்ட முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஜாமீன் கோரி லண்டன் உயர்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம், வழக்கு மோசடி குற்றச்சாட்டை உள்ளடக்கியது எனக்கூறி ஜாமின் மனுவை நிராகரித்தது.
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் 10வது முறையாக நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.