தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர். நேற்று 29-வது நாளாக அவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்த நிலையில், 1000 மெகா வாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.