11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், 7 லட்சத்து 43 ஆயிரத்து 232 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தெரிவித்தார்.
அதில், 3 லட்சத்து 39 ஆயிரத்து 283 மாணவர்களும், 4 லட்சத்து 3 ஆயிரத்து 949 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணினி அறிவியல் பாடத்தில் 3 ஆயிரத்து 535 பேரும், கணிதத்தில் ஆயிரத்து 338 பேரும், வேதியியல் பாடத்தில் 593 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதேப்போல இயற்பியல் பாடத்தில் 390 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 806 மாணவர்களும் நூற்றுக்கு நூறு பெற்று அசத்தி உள்ளனர்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடமும், ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடமும், விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.