பஹல்காம் தாக்குதலை கண்டித்த தலிபான்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மவ்லவி அமீர் கான் முட்டாகியுடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வழியாக பேசினார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், வர்த்தகம், விசா வசதி மற்றும் சபாஹர் துறைமுகம் குறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.