கேடிஎம் நிறுவனம் 250 டியூக் பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது.
பெரிய இன்ஜின் கொண்ட 390 டியூக்கைப் போலான டிசைனையே 250 டியூக் மாடலும் கொண்டிருக்கிறது.
கடந்தாண்டு, அப்டேட் செய்யப்பட்ட 250 டியூக் பைக்கை 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டது.
தொடர்ந்து, கடந்தாண்டு இறுதியிலேயே இந்த பைக்கின் விலையை சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை குறைத்தது. இந்த நிலையில், தற்போது ஐந்தாயிரம் ரூபாய் விலை அதிகரித்துள்ளது.