பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டம் பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அன்புமணி உட்பட பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
மொத்தம் உள்ள 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 25க்கும் குறைவான நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.