ஜப்பானில் பனிப்பொழிவைத் தாங்க முடியாத குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.
ஜப்பானில் ஏராளமான வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக ஜிகோகுடானி பூங்காவிலும் வெந்நீர் ஊற்று உள்ளது.
இந்த நிலையில், அங்குப் பொழியும் கடும் பனிப்பொழிவால் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளக் குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் தஞ்சமடைந்துள்ளன. இதனைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.