காங்கோவில் கொரில்லாவும், அதன் பராமரிப்பாளரும் மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின், விருங்கா தேசிய பூங்காவில் உள்ள சென்க்வெக்வே மையத்தில், கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரில்லாவும், அதன் பராமரிப்பாளரும் ஒருவரை ஒருவர் பிடித்து மகிழ்ச்சியாக விளையாடினர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அனைவரையும் கவர்ந்துள்ளது.