சிதம்பரம் அருகே பு.முட்லூரில் பாஜக மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர், ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் பகுதியில் வசித்து வரும் அஸ்கர் அலிகான் என்பவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து வெளியே செல்ல இருசக்கர வாகனத்தை எடுத்தபோது அஸ்கர் அலிகான் மீது ஏர்கன் துப்பாக்கியால் மர்மநபர்கள் சுட்டுள்ளனர்.
இதில், துப்பாக்கி தோட்டாப்பட்டு அவரது செல்போன் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த வந்த போலீசார், அஸ்கர் அலிகான் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அஸ்கர் அலிகான் தெரிவித்துள்ளார்.