நெதர்லாந்தில் பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள் காண மக்கள் திரண்டனர்.
துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூக்கும். ஈரானைத் தாயகமாகக் கொண்ட துலிப் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது.
இவை இந்தியா, அமெரிக்கா, துருக்கி, ஈரான், இங்கிலாந்து என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
அந்தவகையில், நெதர்லாந்தில் உள்ள தோட்டத்தில் வண்ண வண்ண துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சியைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.