தங்கள் தந்தை மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்று கூறினர். மேலும், தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.