ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.