பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025ம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவாகும்.