கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்த நிலையில், இரவு நேரத்தில் மது அருந்திய நபர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தண்ணீரை அகற்றி தொட்டியைச் சுத்தம் செய்யாமல், தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நிஷாந்த, சஞ்சய் ஆகியோர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் மீதும் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.