அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரையில் கடல் ஓடுகளைக் கொண்டு ‘8647’ என்ற வடிவத்தில் பதிவு ஒன்றை கோமி போட்டிருந்தார். இது வைரலான நிலையில், தனது தந்தையும், அதிபருமான டிரம்ப்பை கொலை செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதாக மகன் ஜுனியர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
அதாவது, 86 என்பது கொலை செய்ய வேண்டும் என்று அர்த்தப்படுவதாகவும், 47 என்பது அமெரிக்காவின் 47வது அதிபர் என்பதைக் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பதிவை ஜேம்ஸ் கோமி நீக்கிய நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.