கேன்ஸ் திரைப்பட விழாவின்போது நடிகை ஊர்வசி ரவுத்தேலா கவனம் ஈர்த்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா வருகிற 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரபலங்களை வரவேற்கும் வகையில் சிவப்பு கம்பள நிகழ்ச்சி நடந்தது.
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பறவையைப் பிடித்திருப்பது போலச் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து போஸ் கொடுத்தார். அந்த வீடியோ காட்சிகளை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.