பெரியகுளம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் அட்டணம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கும், அவரது சித்தப்பா மகன் அழகர் சாமி என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கதிர்வேலின் சகோதரர் அழகிரிசாமியை, அழகர் சாமியின் உறவினர்கள் 3 பேர் அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அழகிரி சாமி, உயிருக்குப் பயந்து வீட்டிற்குள் சென்று உள்ளார். தொடர்ந்து, அழகர் சாமியின் உறவினர்கள் வீட்டின் கதவை அரிவாளால் தாக்கியும், வீட்டுக்கு உள்ளே சென்று அவரை வெட்டவும் முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.