இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்கக் கூடாது என்ற டிரம்ப்பின் கருத்தை விமர்சித்துப் பகிர்ந்த பதிவை நீக்கிவிட்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள கங்கனா, டிரம்ப்-ஐ விமர்சித்துத் தான் வெளியிட்ட பதிவை நீக்குமாறு ஜெ.பி.நட்டா தன்னை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பதிவு தனது தனிப்பட்ட கருத்து எனவும் கங்கனா ரனாவத் தெளிவுபடுத்தியுள்ளார்.