அனிருத்துடன் இணைந்து பணியாற்றப் பல வருடங்களாகக் காத்திருந்தேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விஜய்தேவர்கொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விஐபி மற்றும் 3 படங்களைப் பார்த்தபோது எப்போதாவது தான் ஒரு நடிகராக மாறினால், அனிருத்தான் தன் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் எனத் தோன்றியதாகக் கூறினார்.
மேலும், தான் ஒரு ராஜாவாக இருந்திருந்தால், அனிருத்தை கடத்தி வந்து அரண்மனையில் வைத்து தன் படங்களுக்கு மட்டும் இசையமைக்கச் செய்திருப்பேன் எனவும் விஜய்தேவர்கொண்டா தெரிவித்தார்.