நேட்டோ நட்பு நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, துருக்கிக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு கழகம் வெளியிட்ட செய்தியில், 1,923 கோடி ரூபாய் மதிப்பிலான 53 நவீன நடுத்தர ரக ஏவுகணைகளையும், 676 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பிளாக் 2 ஏவுகணைகளையும் வழங்கும்படி துருக்கி கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.