செங்கல்பட்டு அருகே ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ராஷ்டிர சேவா சமிதி சார்பில் இந்து மகளிருக்குப் பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு அண்ணா நகரில் இயங்கி வரும் சுனிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஏப்ரல் 30ஆம் தேதி பண்பு பயிற்சி முகாம் தொடங்கியது.
15 நாட்களாக நடைபெற்ற முகாமில் 16 பிராந்தியங்களைச் சேர்ந்த 75 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.
இறுதி நாள் நிகழ்ச்சியில் பெண்கள் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைச் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் பூஜினிய ஸவாமினி கிருஷ்ண பெரியாம்பா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.