தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய விமானப் படைக்கு 23 நிமிடங்கள் போதும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் புஜ்ஜில் உள்ள விமானப்படைத் தளத்தில் விமானப்படை வீரர்களிடையே பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கண்காணித்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறிய ராஜ்நாத் சிங், தற்போது நடைபெற்றது வெறும் டிரெய்லர் தான், சரியான சந்தர்ப்பம் வரும்போது ஆப்ரேஷன் சிந்தூரின் முழுமையாக வடிவத்தை உலகம் அறியும் எனத் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் அனைத்து இந்தியர்களையும் பெருமை கொள்ள வைத்துள்ளதாகக் கூறிய அவர், தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய விமானப் படைக்கு 23 நிமிடங்கள் போதும் என எச்சரிக்கை விடுத்தார்.