10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சோபியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்ததுடன் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஜக்கார்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரின் மகள் சுபஸ்ரீ, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதை கொண்டாடும் வகையில் பள்ளி நிர்வாகத்தினர் பட்டாசுகளை வெடித்து மாணவியை உற்சாகப்படுத்தினர். மேலும், சுபஸ்ரீயின் மேற்படிப்பிற்கான கல்வி செலவுகளை நிர்வாகம் ஏற்றது.
இதேபோல கரூர் மாவட்டம் மண்மங்களத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி மாணவி இந்துஜா, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவிக்கு பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.