எடப்பாடி அருகே பெண்கள் அழகு நிலையத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வெள்ளாண்டிவலசு பகுதியில் மகளிர் அழகு நிலையம் உள்ளது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தலைக்கவசம் அணிந்தபடியே அழகுநிலையத்திற்குள் புகுந்தார்.
அப்போது கத்தியை காட்டி மிரட்டி உரிமையாளர் திலகவதியிடம் செயின் பறிக்க முயன்றார். அவர் கூச்சலிட்டதை கேட்ட அங்கிருந்தவர்கள், செந்தில் குமார் என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.