தோகா டைமண்ட் லீக் தடகள போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார்.
டைமண்ட் லீக் தடகள போட்டியின் 16 ஆவது சீசன் கத்தாரின் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90 புள்ளி 23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார்.
இதற்கு முன் 89 புள்ளி 94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே நீரஜ் சோப்ராவின் சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை அவர் முறியடித்துள்ளார். இதன் மூலம் 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்த இந்தியாவின் முதல் வீரர் மற்றும் 3 வது ஆசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும் இந்த போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91 புள்ளி 6 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.