மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சளி மற்றும் முகம் வீங்கியுள்ளதாக சிகிச்சைக்கு சேர்ந்த பெண்மணி உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ ராதாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர், சளி மற்றும் முகம் வீங்கியுள்ளதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி கேட்டும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டம் செய்தனர்.