2025-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. ‘
உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2026-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.