திருச்சி அருகே அஞ்சலகம் மூலம் பொதுமக்கள் சேமித்த 25 லட்சத்துக்கும் மேலான பணத்தை ஊழியர் கையாடல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவளர்சோலை அருகே உள்ள உத்தமர்சீலியில் திருவானைக்கோவில் கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு லதா என்பவர் கிளை அஞ்சலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பொதுமக்கள் சேமித்த 25 லட்சத்துக்கும் மேலான பணத்தை அவர் கையாடல் செய்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.