பிரபு, வெற்றி நடித்துள்ள ராஜபுத்திரன் படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தில் கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்திற்குத் தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபு – வெற்றி காம்போ ஹிட்டடிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.