காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் திருத் தேரில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்து மனமுருகி வழிபாடு நடத்தினர்.