‘புக்கர்’ பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் முஸ்லிம் நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ருஷ்டி, 2022ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது லெபனானைச் சேர்ந்த ஹாரி மட்டார் என்பவர் கத்தியால் குத்தியதில் ருஷ்டி படுகாயமடைந்தார். இந்நிலையில் கைதான ஹாரி மட்டார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.