திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 4 -வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த காவுத்தம்பாளையத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும், அப்பகுதியில் 756 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட, மூர்த்தி மற்றும் அமாவாசை ஆகியோர் மருத்துவமனைக்குச் செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் போராட்ட பந்தலில் வைத்தே அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.