பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்ட பெண் யூடியூபர் உள்பட 6 பேரை ஹரியானா மற்றும் பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
அங்குப் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியப் பகுதிகள் குறித்த ரகசியங்களை பாகிஸ்தானியர்களுக்குப் பகிர்ந்து வந்த நிலையிலேயே ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.