இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை கண்டதும், அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா, மண்டியிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
அல்பேனியாவின் டிரானாவில் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.
இதனைக் கண்ட அல்பேனியா பிரதமர் எடி ராமா, ஜியோர்ஜியா மெலோனியை கண்டதும் தனது குடையை ஓரமாக வைத்துவிட்டு அவர் முன் மண்டியிட்டார்.
பின்னர் எழுந்து நின்றதும் மெலோனியை அவர் கட்டியணைத்தார். தனது நாடு உச்சி மாநாட்டை நடத்த ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்து மரியாதை கொடுத்ததற்காக அவர் இவ்வாறு செய்தார்.